வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் வைத்து இன்று (19) மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
வாழைச்சேனை பகுதியில் இருந்து மீன் வியாபாரத்திற்காக மாங்கேணி பகுதிக்குச் சென்று ஊர் திரும்பும் போதே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது எதிரே வந்த பஸ் வண்டி மோதியதில் குறித்த நபர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் மரணமடைந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வாழைச்சேனையைச் சேர்ந்த 40 வயதுடைய சலீம் றபாய்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.