Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை;பிள்ளையார்,முருகன் சிலையையும் கைப்பற்ற முயற்சி!

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை;பிள்ளையார்,முருகன் சிலையையும் கைப்பற்ற முயற்சி!

3 years ago
in செய்திகள்

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் விக்கிரங்களை மீள பிரதிஸ்டை செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்வது தொடர்பில் நேற்று (01.04.2023) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் ஆதி சிவன் ஆலய விக்கிரகத்தையும் உடைக்கப்பட்ட ஏனைய விக்கிரகங்களையும் இன்று(02.04.2023) மீள பிரதிஸ்டை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆலய நிர்வாகத்தினர் முன்னெடுத்திருந்தனர். அதனடிப்படையில் அதற்கான வேலைகள் நேற்று (01.04.2023) காலையில் இருந்து நடைபெற்றன.

இதன்போது அங்கு வந்த தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்துவதாக பொலிஸாருக்கு எழுத்து மூலம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் பிள்ளையார்,முருகன் உள்ளிட்ட ஏனைய விக்கிரகங்களையும் எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். நான் ஆலயத்தில் நின்றமையால் விக்கிரங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. பொலிஸாருடன் கடுமையாக தர்க்கத்தில் ஈடுபட்டு ஒரு தொகுதி விக்கிரகங்களை அங்கிருந்து எனது வாகனத்தில் கொண்டு வந்து வேறு ஒரு ஆலயத்தில் தற்காலிகமாக வைத்துள்ளோம்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் அவரின் ஊடாக பொலிஸ் மா அதிபர் ஆகியோருடனும் பேசியிருந்தேன். நீண்ட இழுபறியின் பின் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று(02.04.2023) அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் வடமாகண பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் வெடுக்குநாறி மலைக்கு வருகை தரவுள்ளனர்.

இதன்போது ஆலய பிரதிஸ்டை தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டு ஆலய பிரதிஸ்டை விரைவாக இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
ஒரே நாளில் அரசுக்கு எதிராக களமிறங்குகிறது தமிழ் கட்சிகள்; வடகிழக்கில் 8மாவட்டங்களிலும் போராட்டம் !

ஒரே நாளில் அரசுக்கு எதிராக களமிறங்குகிறது தமிழ் கட்சிகள்; வடகிழக்கில் 8மாவட்டங்களிலும் போராட்டம் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு