அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படு
கொலையை எதிர்த்து பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்கு – கிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரேநாளில் முன்னெடுக்கத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகேயுள்ள தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நேற்று மாலை நடந்த
கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளான ‘புளொட்’ தலைவர் த. சித்தார்த்தன், ‘ரெலோ’ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ‘ஈ. பி. ஆர். எல்.எவ்.” தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் உள்ளிட்ட 7 தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் – பிரதிநிதிகள் மற்றும் எம். ஏ. சுமந்திரன் எம். பி. ஆகியோரும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர், வேலன் சுவாமிகள் ஆகியோருடன் 22 பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தமிழ் மக்களின் தொன்மையையும் தேசியத்தையும் சிதைக்கும் வகையில் கலாசார
பண்பாட்டு மற்றும் சமூக விழுமியங்களை சிதைத்து நமது இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில்
சைவ ஆலயங்களை நிர்மூலமாக்கியும் அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலையை எதிர்த்து
பெரும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில்முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான ஒழுங்குகளை முன்னெடுக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இதேபோன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள இவ்வேளையில்
அதனுடைய கடுமையான எதிர்விளைவுகளை கவனத்தில் கொண்டு அச்சட்ட மூலத்தை எதிர்த்தும் அதை நிறைவேறாமல் தடுப்பதற்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரை யாடல் நடத்தி ஒன்றிணைந்த எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான திகதிகள் விவரங்கள் என்பன ஏற்பாட்டு குழுவினரால் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கு. சுரேந்திரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் அங்குள்ளநாடாளுமன்ற உறுப்பி னர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கல நாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் கு.சுரேந்திரன், பா.கஜதீபன், விதுசன், க. சர்வேஸ்வரன், நிஷாந்தன், வேலன் சுவாமி, கலையமுதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.