காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு – அதற்காக 1500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.
- விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள்.இதற்காக தனியாரும் இணைக்கப்படுவர்.2500 மில்லியன் ரூபா இவற்றுக்காக ஒதுக்கீடு.பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை.அதற்காக சட்டத்திருத்தம்.அரச காணிகளில் 300 ஏக்கர் கனியும் இதற்காக ஒதுக்கீடு.
- மீன்பிடித்துறை மேம்பாட்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.நன்னீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
*பால்பண்ணையாளர்களுக்கு விசேட திட்டங்கள் – பண்ணையாளர்களுக்கு விசேட கடன் திட்டங்கள்
- கட்டிட நிர்மாணத்துறைக்கு விசேட திட்டங்கள் – அவர்களுக்கு அரச காணிகளை வழங்க திட்டம்.நிர்மாணப்பணிகளுக்கு விசேட உதவித்திட்டங்கள் – வீடமைப்புத் திட்டங்களை வழங்கி நிர்மாணத்துறையினருக்கு ஊக்குவிப்பு
- துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம். திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை
- வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்திற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
- காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு – அதற்காக 1500 மில்லியன் ஒதுக்கீடு
- வடக்கு குடிநீர் விநியோக திட்டங்களுக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு
- பூநகரி அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
- பண்டாரவளை பொருளாதார நிலையம் அமைக்க திட்டம் – 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு