அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா, அவரது மனைவி நிலந்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் துசித வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் துசித குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் சிசிடிவி கெமராக்கள் வேலை செய்யவில்லை என பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு கூறியுள்ளனர்.
ஏறக்குறைய 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பல்லாரட் நகரசபை மேயரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.