பிரித்தானியாவின் கட்டுப் பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சுமார் 68 புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு சென்று 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தங்களை அங்கிருந்து மூன்றாம் தரப்பு நாடுகளுக்காவது அனுப்புமாறு கோருகின்றனர்.குறித்த தீவில் இதுவரை 68 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பெண்களும், 47 ஆண்களும், 17 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்கள் கனடா நோக்கிச்
சென்றபோது அவர்களது படகு சேதமடைந்த நிலையில் பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவத் தளம் அமைந் துள்ள டியாகோ கார்சியாவில் தஞ்சமடைந்தனர். சில வாரங்களில் அவர்களை அங்கிருந்து அனுப்புவதாக தீவின் அதிகாரிகள் அறிவித திருந்த போதிலும் அவர்களில் 68 பேர் 18 மாதங்களாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அங்குள்ள பலர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கின்ற சம்பவங்கள் தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அங்குள்ள மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.