இலங்கையில் மிகவும் பழமையான விளையாட்டுக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 50ஆவது ஆண்டு நிறைவினை
முன்னிட்டு சீருடை,தொப்பி அறிமுகம் மற்றும் இணையத்தள அங்குரார்ப்பணம், பாடல் வெளியீடு என்பன மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
1972ஆம் ஆண்டு கோட்டைமுனை யுத் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுக்கழகம் பின்னாளில் கோட்டைமுனை விளையாட் டுக்கழகமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறுவிதான சூழ்நிலைகள் நிலவிய காலப்பகுதியிலும் இளைஞர்களை உள்ளீர்த்து தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இளைஞர்களை கொண்டு சென்று வெற்றி வாகை சூடிய கழகமாக இருந்துவருகின்றது.
கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஊடாக தேசிய கிரிக்கெட் அணிக்கும் வீரர்களை
கொண்டு செல்லும் வகையில் சர்வதேச ரீதியான கிரிக்கெட் பயிற்சியாளராக கடமையாற்றும் மலிங்க சொரபுலிகே இதன் போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.