பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியாவில் மேலும் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நால்வர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நேற்றையதினம் தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை முன்னதாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அவர்களில் இருவருக்கு மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு பிரித்தானியா அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.