Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

8 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனுரா மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பலத்த சேதமடைந்ததுடன், அங்கு தீப்பற்றியதாகவும் ஹூதி இராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாசா செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட புகைப்படங்களில், குறித்த சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றியுள்ள சுமார் 600 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கரும்புகை சூழ்ந்திருந்தமை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் தாக்கம் சர்வதேச எண்ணெய் சந்தையிலும் எதிரொலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 82 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.

சவூதி அரேபியாவின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு சுமார் 550,000 பீப்பாய் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான சவூதி அராம்கோவினால் இயக்கப்படும் இந்த நிலையத்தின் உற்பத்தியில் பெரும்பகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஹூதி தரப்பின் அறிவிப்பைத் தவிர, சவூதி அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அராம்கோ நிறுவனத்திடமிருந்தோ உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை எனச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏமனில் மேற்கத்திய ஆதரவு பெற்ற அரசாங்கம் செயற்படும் இடைக்காலத் தலைநகரான ஏடன் நகரை நோக்கி ஹூதி படையினர் தரைவழியாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் தொடர்பில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்
செய்திகள்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

November 26, 2026
அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!
செய்திகள்

அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!

November 26, 2026
யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை
செய்திகள்

யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை

November 26, 2026
ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது
செய்திகள்

ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது

November 26, 2026
எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்
செய்திகள்

எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்

November 26, 2026
யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!
செய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.