கித்துல் தேன் தொடர்பான பொருட்களின் தரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கித்துல் அபிவிருத்திச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படும் கித்துல் தேன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் தரம் தொடர்பில் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு சீனி சேர்க்கப்படுவதால் கித்துல் தேன் தொடர்பான பொருட்கள் விற்பனையில் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கித்துல் தொடர்பான பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி காணப்படுவதால் கித்துல் தேனின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கித்துல் அபிவிருத்தி சபைக்கு ஆலோசனை வழங்கினார்.