Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தங்கேணியில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

சித்தங்கேணியில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில கட்டளைகளை வழங்கியுள்ளார். அந்தவகையில் ஊடகங்கள், சட்ட வைத்திய அதிகாரி, ஆயுள்வேத வைத்திய அதிகாரி ஆகியோரின் சாட்சிகளின் அடிப்படையில் ஐவரை கைது செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்றைய தினம் (24) சித்தங்கேணியில் தாக்கப்பட்டு இறந்தவருக்காக 50ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்ததுடன். சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தின் பேரிலே அதாவது இன்றையதினம் சாட்சியமளித்த ஐந்து சாட்சிகளிலே மூன்றாவது சாட்சியாக சாட்சியமளித்த நபர் இறந்தவர்களுடன் சமகாலத்தில் தானும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறியிருப்பதன் அடிப்படையில் அவரின் சாட்சியங்களும் கேட்டறியப்பட்டது.

பின்னர் அவரால் கூறப்பட்ட இரண்டு பொலிஸ் அலுவலர்களை கைது செய்து நீதிமன்றம் முன்னாலே முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் இன்றையதினம் கட்டளையிட்டது.

மேலும் இந்த சாட்சி தனது வாக்குமூலத்தில் தான் பொலிஸ் நிலையத்திற்கு வெளியிலும் சில இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் அந்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று அந்த இடங்களை அடையாளம் காட்டுவதற்கும், விஞ்ஞானபூர்வமான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்குமான் கட்டளை ஒன்றை ஆக்குமாறு இன்றையதினம் பொலிஸ் தரப்பில் ஆஜராகியிருத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் இளங்கக்கோன் விண்ணப்பம் செய்ததன் பேரிலே அதற்கான கட்டளையும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் இவ்விதம் அழைத்து செல்லப்படுகின்ற பொழுது அவருடைய நலன்களை உத்திரவாதப்படுத்துவதற்கு சட்டத்தரணிகளால் பெயர் குறிப்பிடப்பட்ட இரண்டு சட்டத்தரணிகளும் அவருடன் கூடச் செல்வதற்கும் நீதிமன்ற அனுமதி வழங்கி உள்ளது.

இதைவிட குறித்த சாட்சியினாலே அங்க அடையாளங்கள் விவரமாக குறிப்பிடப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் விவரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிமன்ற கட்டளை வழங்கியுள்ளது.

இதைவிட இன்றையதினம் நீதிமன்றுக்கு வந்து சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி அவர்கள் தன்னுடைய சாட்சியத்திலே இறந்தவருடைய உடலில் காணப்பட்ட காயங்களை விவரித்ததோடு அந்த காயங்கள் தொடர்பான தன்னுடைய அபிப்பிராயத்தையும் காயங்கள் மூலமாகத்தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்பதனையும் மரணம் ஏற்படுவதற்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டது தான் பிரதான காரணமாகவும் இருந்தது என கூறியிருந்தார்.

இது ஒரு மனித ஆட்கொலை என்ற அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்றும் நீதிமன்று சுட்டி காட்டி இருந்தது.

மேலும் இந்த இரண்டு பொலிஸ் அலுவலர்களும், கடந்த காலங்களிலே சில வழக்குகளில் நிகழ்ந்ததைப் போல ஒருவேளை இன்றைய மரண விசாரணை நடவடிக்கைகளின் பின்னணியிலே நாட்டை விட்டு செல்ல கூடும் என்ற அச்சத்தினை சட்டத்தரணிகள் வெளிப்படுத்தி அவர்களுக்கு பிரயாணத் தடை வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாத விதத்தில் பிரயாண தடையினை பொலிஸ் துறை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது. அதற்கான மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவாதத்தினை வழங்கினார்.

மேலும் தாங்கள் மேற்கொண்டுள்ள உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
பிரபல கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி!

பிரபல கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.