ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனமான Humane ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக செயல்படக்கூடிய, அணிந்து கொள்ளும் வசதி கொண்ட Ai Pin அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறிய அளவிலான கேட்ஜெட்டை நீங்கள் அணியக் கூடிய ஆடையில் மாட்டிக் கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் தொலைபேசி அழைப்புகள் செய்வது, குறுஞ்செய்தி அனுப்புவது, மொழிபெயர்ப்பது மற்றும் இணைய தேடல்கள் செய்வது போன்ற வசதிகளை பெறமுடியும்.
“Humane என்பது அடுத்த தலைமுறைக்கான மின்னியல் தொழில்நுட்ப பொருட்களை உருவாக்கக்கூடிய பல நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால் ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்களைப் போல வழக்கமான ஹெட்செட்டுகள் தயாரிப்பதில் இருந்து விலகி இருக்கக்கூடிய ஒரு நிறுவனமே Humane,” என்பதை இந்த நிறுவனத்தின் கோ-நிறுவனர் மற்றும் தலைவர் இம்ரான் சௌத்ரி தெரிவித்தார்.
Humane AI Pin என்பது என்ன? மற்றும் இது எவ்வாறு வேலை செய்கிறது?
இந்த Ai Pin சாதனம் இரண்டு பகுதிகளில் அணிந்து கொள்ளக்கூடியதாக அமைகிறது. சதுர வடிவிலான இந்த சாதனத்தில் உள்ள காந்தமானது நமது துணி அல்லது பிற மேற்பறப்புகளில் ஒட்டிக்கொள்கிறது. இந்த விலையுடன் கூடுதலாக Humane சந்தா பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் 24 டாலர் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலமாக நீங்கள் ஒரு தொலைத்தொடர்பு இலக்கம் மற்றும் T-Mobile’s இணையம் மூலமாக டேட்டா கவரேஜ் பெறுவீர்கள்.
Ai Pin வாய்ஸ் கட்டுப்பாடுகள், தொடுகை கட்டுப்பாடுகள் மற்றும் பயனரின் நோக்கங்களை புரிந்து கொள்வதற்கு கேமரா போன்றவற்றை பயன்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் பயனரின் கையில் தகவல்களை காட்டுவதற்கும், செய்வதற்கும் இதில் ஒரு சிறிய அளவிலான திரையும் உள்ளது. Ai Pin ChatGPT-creator OpenAI மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் cloud computing power ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
ஸ்மார்ட் ஃபோன்களை காட்டிலும் அதிக சௌகரியமானதாகவும், குறைவான கவனச்சிதறல் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கும் வகையில் Ai Pin வடிவமைக்கப்பட்டுள்ளதாக Humane நிறுவனம் கூறுகிறது. Ai Pin எப்பொழுதும் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டிருக்கும் என்பதால் இது எப்போதும் பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் இருக்கும்.
வழக்கமான ஸ்கிரீன் இல்லாத ஒரு சாதனத்தை Humane நிறுவனம் வழங்குகிறது. இது முழுக்க முழுக்க யூசர் உடன் இன்டராக்ட் செய்வதற்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை பயன்படுத்துகிறது. புகைப்படங்கள் எடுப்பதற்கும் அல்லது உணவுகளை ஸ்கேன் செய்து அந்த உணவின் ஊட்டச்சத்து மதிப்பை சொல்வதற்கு இந்த Pin ஒரு கேமராவை கொண்டுள்ளது.
அதேசமயம் இதன் விலையானது $699 அமெரிக்க டொலர் எனவும் இலங்கை மதிப்புப்படி 228900 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.