Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாட முயன்ற பெண் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாட முயன்ற பெண் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாகரன் என குறிப்பிட்ட பிறந்தநாள் கேக்கை கொண்டு சென்றதாக கூறப்படும் 43 வயதுடைய பெண் ஒருவர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்த பெண்ணிடம் பிறந்தநாள் கேக்கிற்கு மேலதிகமாக மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல பொருட்களும் காணப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாகரை துயிலுமில்லத்திற்கு அருகில்
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருடன் போரிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் புதைக்கப்பட்ட வாகரை முன்மாரி மயானத்திற்கு அருகில் உள்ள வீதியில் காவல்துறை குழுவொன்று கடமையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது அவ்வழியாக கேக்குடன் சென்ற பெண்ணிடம் நடத்திய விசாரணையின்போது, ​​வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மயானத்திற்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றதாக தெரியவந்ததாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு வேறு நபர்கள் மயானத்திற்கு வரவிருந்ததாகவும், ஆனால் பிறந்தநாள் கேக் மற்றும் பிற பொருட்களுடன் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதையடுத்து அதைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண் வாழைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்
உலக செய்திகள்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
Next Post
அவுஸ்திரேலியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல்கள்!

அவுஸ்திரேலியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு