இலங்கையின் முப்படைகளிலிருந்தும் தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15360 பேர் பாதுகாப்பு பிரிவிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இராணுவத்தின் 99அதிகாரிகள், கடற்படையின் 26 அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் 15 அதிகாரிகள் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாகும்.
மற்ற அணிகளில் உள்ள 15220 பேரில் இராணுவத்தின் 12643 பேரும் கடற்படையின் 1770 பேரும் உள்ளனர். தலைமறைவான அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளிலுள்ளவர்களை கைது செய்வதற்கு ஒரேயொரு பொது மன்னிப்பு காலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தலைமறைவான நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நாடு முழுவதும் கொலைகள் மற்றும் கும்பல் நடவடிக்கைகளுக்கு ஒப்பந்தக் கொலையாளிகளாக பாதாள உலக தலைவர்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை வேலைக்கு அமர்த்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.