மகளிர் பிரீமியர் லீக்கின்(WPL) தொடரின் 2வது சீசனுக்கான ஏலம் தொடங்கப்பட உள்ள நிலையில் இலங்கை அணி தலைவியின் அடிப்படை விலை தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் தொடரானது இந்த ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் அதில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகையை சூடியது.
இதனையடுத்து அடுத்த ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக்கின் தொடரின் ஏலம் எதிர்வரும் 9ஆம் திகதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தொடரில் 104 இந்திய வீராங்கனைகள், 61 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை விலைகளுக்கமைய மேற்கிந்திய தீவுகளின் டியன்ட்ரா டோட்டின் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிம் கார்த் ஆகியோருக்கு 50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவின் அன்னபேல் சதர்லேண்ட், ஜியார்ஜியா வாரெஹம்,மற்றும் இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ்(தென் ஆப்பிரிக்கா),ஷாப்னிம் இஸ்மாயில் தென் ஆப்பிரிக்காவின் ஆகியோருக்கு 40 லட்சம் அடிப்படை விலை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கேப்டன் FAWLG9 சமரி அதப்பத்து, இங்கிலாந்தின், டேனில்லே வையாட், அவுஸ்திரேலியாவின் போஎபே லிட்ச்ஃபீல்டு, அமண்டா வெல்லிங்டன், அயர்லாந்தின் ஒர்லா ப்ரெண்டர்கஸ்ட்,பங்களாதேசின் மருஃபா அக்தர் ஆகியோருக்கு 30 லட்சம் அடிப்படை விலை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.