Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்!

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த மட்டு கொக்குவில் சிறுவன்; சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணியொன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சிறுவன் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதனை‍ தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர், நீதிவானின் உத்தரவின் பிரகாரம், இந்த காப்பகத்தில் பாதுகாப்புக்காக சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இப்பாடசாலையில் சிறுவன் கடந்த புதன்கிழமை (நவ. 29) அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும், சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் தமக்கு மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், சிறுவனின் உடலில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும், உட்காயங்களினால் இந்த மரணம் நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போதே சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (2) இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினத்தன்று இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும், பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்குப் பின்னான வாக்குமூலங்களை வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் நேற்றிரவு 02 கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளை பாடசாலையின் நிர்வாகம் முன்வைப்பதாகவும், மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் தாம் வாழ்வதாகவும், எமது பிள்ளைக்கு நடந்ததைப் போல் இனி யாருக்கும் இடம்பெறக்கூடாது என்றும் மகனின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!
செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

June 17, 2026
Next Post
இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அரசின் மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அரசின் மகிழ்ச்சியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.