நாட்டின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் முத்துராஜவெலயில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதன் கட்டுமாணப் பணிகள் அடுத்த ஆண்டு துவங்கி, 2026ல் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 350 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.
இதன் கட்டுமாணச் செலவு 750 மில்லியன் ரூபா.
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான முத்துராஜவெல பிரதேசத்தில் 10 ஏக்கர் காணி இந்த மின் நிலையத்தை அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த காணியை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்த காணியை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதன் மூலம் 720 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.