Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமணம் செய்து வைப்பதாக கூறி பெண்களை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் கைது

திருமணம் செய்து வைப்பதாக கூறி பெண்களை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் கைது

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு 2.5 முதல் 5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து வந்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ளது.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்து பொலிஸாரிடம் புகார் அளித்த பின்பு மோசடி அம்பலமாகியுள்ளது.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொலிஸார் அறக்கட்டளையின் அலுவலகத்தை சோதனை செய்து காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

பெண்களை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள்.

காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார். சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் ‘விலை’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இது மாதிரியான 1,500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
புத்தாண்டு பலகாரங்களுக்கான செலவினம் 7வீதத்தால் அதிகரிப்பு

புத்தாண்டு பலகாரங்களுக்கான செலவினம் 7வீதத்தால் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு