மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்ரிக்கர்களை ஒழிக்க எடுத்த நடவடிக்கை மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 100 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.தேசிய பொருளாதார மற்றும் பௌதிக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில்கலந்துரையாடுவதற்காக மதுவ ரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள், அந்த குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.
மதுவரி சட்டத்தில் மேற் கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், எழுமாறான சோதனைகள் தொடர்வதும் மதுபான போத்தல்களில் போலி ஸ்ரிக்கர்களை ஒட்டுவதை மேலும் குறைக்கும் என குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.