Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் போராட்டம்!

வாழைச்சேனையில் போராட்டம்!

3 years ago
in மட்டு செய்திகள்

கடந்த 10 வருடத்திற்கு மேலாக 250 ரூபாவிற்கு சேவையாற்றும் எங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாது புகையிரத திணைக்களத்தினுள் நிரந்தர நியமனம் தருமாறு கோரி பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (6) வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் ஒன்று கூடியவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் வாழைச்சேனை பிரதான கொழும்பு வீதி வழியாக ஊர்வலமாக நடந்து வந்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசே நிரந்தர நியமனத்தை தா ,சம்பளத்தினை அதிகரித்து தா போன்ற கோரிக்கை அடங்கிய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை தீர்வு பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியிடம் கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக இதன்போது தெரிவித்தார்.

மேற்படி பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் வாழைச்சேனை பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான 26 புகையிரத கடவவையில் 78 பேர் கடமை பரிந்து வருக்கின்றனர்.

கடந்த 2013.7.11 ஆம் திகதி சேவைக்கால அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தினால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

நாளொன்றுக்கு 8 மணித்தியாலம் பணியாற்றி மாதாந்த சம்பளமாக ரூபா 7500 பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைய விலைவாசி அடிப்படையில் இதனைக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ளமுடியாது என்று கவலை கூறுகின்றனர்.

அத்துடன் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் குறித்த பணிக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் இதனால் தங்களது கடமைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தங்களையும் குறித்த கடமைக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்கி பணியமர்த்தி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸுக்கு பறிக்கப்பட்டது பதவி!

போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸுக்கு பறிக்கப்பட்டது பதவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு