Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு

மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு

56 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றதுடன் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மீண்டும் மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா கணக்குபிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ரவீந்திரன் நிரோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சம்பவ தினமான சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மாவட்டத்தில் கடந்த 2025 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதிவரை 147 பேர் தற்கொலை செய்து கொண்டனர் இந்த நிலையில் 2026 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஓக்டோபர் 18 வரை காலப்பகுதியில் 92 பேர் தற்கொலை செய்து கொண்டதுடன் கடந்த 12ம் திகதி தற்கொலை செய்வதற்கு கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்த 19 வயது இளம் யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியதுடன் கடந்த 15 ம் திகதி சித்தாண்டியில் 21 வயது இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு மாவட்டத்தில் மீண்டும் தற்கொலை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தி காரணங்களை கண்டறிந்து இந்த தற்கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு
செய்திகள்

நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு

October 18, 2026
பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு
செய்திகள்

பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு

October 18, 2026
அரசாங்கத்திற்கு எதிராக செயற்கையான அமைதியின்மையை உருவாக்கும் இரு தொலைக்காட்சி சேனல்கள்; ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக செயற்கையான அமைதியின்மையை உருவாக்கும் இரு தொலைக்காட்சி சேனல்கள்; ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு

October 18, 2026
திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

October 18, 2026
நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ
செய்திகள்

நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ

October 18, 2026
எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்
செய்திகள்

எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்

October 18, 2026
Next Post
நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு