வாழைச்சேனை ஜப்பான் கராத்தே-டோ புடோகுகான் ஷோடோகான் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் 21 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 17.10.2026 அன்று புத்தளம், வென்னப்புவ அல்பர்ட் பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இச்சர்வதேசப் போட்டியில் பங்கேற்ற 21 மாணவர்களும் சிறப்பாகப் போட்டியிட்டு பதக்கங்களை வென்று நாட்டுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் காட்டா பிரிவில் 14 தங்கப் பதக்கங்களையும் 07 வெள்ளிப் பதக்கங்களையும் மாணவர்கள் வென்றுள்ளனர். மேலும், சண்டைப் போட்டியில் 09 தங்கப் பதக்கங்களையும் 12 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














மாணவர்களின் திறமை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாக அமைந்த இச்சாதனையைப் பாராட்டி, சமூக அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இப்போட்டிக்காக மாணவர்களைத் தயார்படுத்திப் பயிற்சியளித்த த. சதானந்தகுமார் (ரங்கன் மாஸ்டர்) அவர்களுக்கும், மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருந்த நாகராஜா மாஸ்டர் அக்சயன் மாஸ்டர் ஆகியோர் களுக்கும் வாழைச்சேனைச் சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன








