நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 123 குடும்பங்களை சேர்ந்த 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
தொடர் மழையினால் நீர்நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது
ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச்சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 621 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது
சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது .
தென் மாகாணம் கம்பாந்தோட்டை மாவட்டத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.