மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த வகைகளுக்கான தட்டுபாட்டினை குறைக்கும் வகையில் வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்திய அதிகாரிகளினால் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் குருதி கொடையாளர்கள் ஆகியோரிடம் விசேட வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இரத்த வங்கிப் பிரிவு வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கிழக்கு ஐ.டி.எம் கல்வி நிலையத்தின் ஐந்தாவது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இரத்தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வி நிலையத்தின் பணிப்பாளர் டி.சசிகுமார் தலைமையில் ‘உதிரம் கொடுத்து உயிரை காப்போம் ‘ எனும் தொனிப் பொருளில் நடாத்தப்பட்ட இரத்தான முகாமில் பலரும் இரத்ததானம் வழங்கினர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் கீர்த்திகா மதனழகன், பொதுசுகாதார பரிசோதகர் பைசல் உட்பட வைத்திய ஆளணியினர் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.