இந்தியாவில் பஞ்சாப்பின் அண்டை மாநிலமான ஹரியாணாவில் 75 வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஹரியாணா மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மரங்களை பராமரிப்பதை முக்கிய நோக்கமாக கொண்ட இந்த திட்டத்தின் பெயர் ‘பிரான் வாயு தேவதா யோஜனா’.
இத்திட்டம் ஹரியாணா முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனியார், பஞ்சாயத்து அல்லது வேறு எந்த இடத்திலும் 75 வயதுக்கு மேற்பட்ட பழமையான மரம் இருந்தால் அதற்கு மாதம் 2,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பழமையான மரங்களை தங்கள் நிலத்தில் வைத்திருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்கள் அந்த மரங்களை முறையாக பராமரித்து வந்தால் அரசாங்கம் அவர்களுக்கு ஓய்வூதியத்தை அளிக்கும் எனவும், மாநிலத்தில் உள்ள 3810 பழமையான மரங்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஹரியாணா மாநில வனத்துறை அதிகாரி ஜெய் குமார் குறிப்பிட்டு இருந்தார்.