வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதற்காக, விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்த உடனேயே போட்டித்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.
எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் இதனால் சிறந்த பலன் கிடைக்கும். காரணம் எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது.
3 நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையுடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் எரிபொருட்களின் விலைகளை இவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது.
உலக சந்தை நிலைவரம் மற்றும் டொலரின் பெறுமதி என்பவற்றின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன என்றார்.