தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் அமைந்துள்ள சுழலும் உணவகம் இம்மாதம் 9ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரேயொரு சுழலும் உணவகம் இதுவாகும் என்றும், இந்த உணவகம் திறப்பதால் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தாமரை கோபுரத்தின் 27வது மாடியில் அமைந்துள்ள சுழல் உணவகம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்க நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் கலந்துகொண்டார்.
இந்த உணவகம் இம்மாதம் 09ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு திறக்கப்படவுள்ளது.