மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஸதா என்ற மாணவி 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் பி.எம்.எச்.இல் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர்பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த சர்வதேச போட்டி கடந்த 3ம் திகதி மலேசியாவில் 80 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்துகொண்ட போது 6 வயதுடைய அக்ஸதா போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
செங்கலடி மத்தியமகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியும் மாமாங்கம் யுசிமாஸ் மனக்கணக்கு கல்வி நிலையத்தில் கற்றுவரும் இவர் செங்கலடியைச் சேர்ந்த தமிழ்செல்வன் நிதர்சினி தம்பதிகளின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.