Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அறுபது இலட்சம் ரூபா வலைகள் நாசம்; இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுவோம் – மீனவ சங்கங்கள் எச்சரிக்கை!

அறுபது இலட்சம் ரூபா வலைகள் நாசம்; இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுவோம் – மீனவ சங்கங்கள் எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசத் தலைவர் செல்லத்துரை நற்குணம் எச்சரிக்கை விடுத்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆறாம் திகதி யாழ்ப்பாண மாவட்ட கடற் பரப்புகளில் அத்துமீறி வருகை தரும் இந்தியா ரோலர் படகுகளினால் எமது மீனவர்களின் சுமார் 60 இலட்சத்துக்கு அதிகமான மீன்பிடி வலைகள் அறுத்து நாசம் செய்துள்ளது .

இந்தியா இல்லை தாண்டி மீனவர்களினால் பல வருட காலமாக எமது மீனவ மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் கடற்தொழில் உபகரணங்களையும் இழந்துள்ள நிலையில் எவ்விதமான இழப்பீடுகளும் கிடைக்கப் பெறவில்லை.

அண்மையில் கூட அத்து மீறிய இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கிப் போராட்டம் நடத்தியதோடு இலங்கை ஜனாதிபதி கடற் தொழில் அமைச்சர் மற்றும் இந்தியா பிரதமருக்கு அனுப்புமாறு எமது கோரிக்கை மஜகரை அரசாங்க அதிபரிடம் கையளித்தோம்.

ஆனால் எமது கோரிக்கைக்கு எவ் விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது கடந்த ஆறாம் திகதி இந்திய மீனவர்களினால் எமது மீனவர்களின் வலைகள் அறுத்து நாசம் செய்ததோடு மீன்களும் எள்ளிச் செல்லப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் யாழ் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் எவ்விதமான கரிசனையும் கொள்ளவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பல மீனவக் குடும்பங்கள் வாழ வழி இன்றி காணப்படும் நிலையில் எமது தொப்புக் கொடி உறவுகள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வருகின்றனர்.

ஆகவே இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு தொடர்ந்து இந்திய மீனவர்களின் வருகை அதிகரிக்குமானால் யாழில் உள்ள இந்தியத் துனைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார் .

குறித்த ஊடக சந்திப்பில் கடற் தொழிலாளர் கிராமிய அமைப்பின் உப தலைவர் அந்தோணி பிள்ளை மரியதாஸ் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன பொருளாளரும் வலி வடக்கு கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் உப தலைவருமான மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கும் மதுபானசாலைகள்; விசேட அறிக்கை வெளியீடு!

அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கும் மதுபானசாலைகள்; விசேட அறிக்கை வெளியீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு