ஈரானைத் தாக்குவதற்குதாம் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் கூட அவ்வாறு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேலிய இராணுவம் தொலைதூர நாடுகளிலும் நாட்டுக்கு அருகாமையிலும் தாக்கும் திறனைக் கொண்டுள்ளது என ஹலேவி கூறினார்.அடுத்த சில ஆண்டுகளில் ஈரான் மீதான முன்கூட்டிய தாக்குதலுக்கு இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அதன் திறன்களை மேம்படுத்தும் என்றும், புவியியல் தூரம் இருந்தபோதிலும் அத்தகைய தாக்குதலின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
“எங்களுக்குத் தனியாகச் செயல்படத் தெரியும். நாம் ஒரு இறையாண்மையுள்ள தேசம், அதன் சொந்த முடிவுகளை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா எங்கள்பக்கம் இருப்பது நல்லது, ஆனால் அது ஒரு கடமை அல்ல, ”என்று அவர் மேலும் கூறினார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் சிரியாவில்தனது இரண்டு இராணுவ வீரர்களை இஸ்ரேல் கொன்றதாக ஈரான் குற்றம் சாட்டியதோடுபதிலடி கொடுப்பதாக உறுதியளித்தது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சிகளை தொடர்வதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது, ஆனால் ஈரான் மறுக்கிறது. ஈரானின் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப் படுத்த இராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், இராணுவ நடவடிக்கையை நாடுவோம் என்று இஸ்ரேல் முன்னதாக எச்சரித்திருந்தது. இஸ்ரேலுக்கும் அமெரிக்கா விற்கும் இடையே ஒரு அரிய பொது கருத்து வேறுபாடு
அண்மையில் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரே லிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை நீதித் துறையை பலவீனப்படுத்தும் முயற்சியில் இருந்து பின்வாங்குமாறு அழைப்பு விடுத்தார். இது இஸ்ரேலில் பாரிய எதிர்ப் புகளைத் தூண்டியுள்ளது.நெத்தன்யாகு, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று பதிலளித்தார். ஆனால் பிடன் அழைத்த ஜனநாயக உச்சிமாநாட்டில்
அவர் பங்கேற்றபோது மிகவும் இணக்கமான தொனியை எடுத்தார்.
அந்த பரிமாற்றத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்ரனி பிளிங்கன் தனது இஸ்ரேலிய பிரதிநிதி எலி கோஹனை அழைத்து, “நிலையான அமெரிக்க – இஸ்ரேல் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த்படேல் தெரிவித்தார்.