புகைப்படங்களில் பெண்களை ஆடை இல்லாமல் காண்பிக்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் Appகள் மற்றும் இணையதளங்கள் பிரபலமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பரில் மட்டும், 24 மில்லியன் மக்கள், புகைப்படங்களில் பெண்களின் ஆடைகள் அகற்றி காட்டும் இணையதளங்களைப் பார்வையிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதள பகுப்பாய்வு நிறுவனமான Graphika இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இத்தகைய Appகள் மற்றும் இணையதளங்கள் சந்தைப்படுத்துதலுக்காக பிரபலமான சமூக ஊடகங்களுடன் வேலை செய்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, X மற்றும் Reddit உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இத்தகைய Appகளுக்கான விளம்பர இணைப்புகளின் எண்ணிக்கை 2,400% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி ஒரு நபரின் படம் நிர்வாணமாக மாற்றப்படுகிறது. இதில் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். யார் வேண்டுமானாலும் யாரையும் படம் எடுத்து படங்கள், வீடியோக்கள் தயாரித்து பரப்பலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், தவறான உள்ளடக்கம் கொண்ட விளம்பரங்களை Google அனுமதிப்பதில்லை என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய விளம்பரங்களை மதிப்பாய்வு செய்து, அதன் கொள்கைகளை மீறும் விளம்பரங்களை அகற்றுவதாக கூகுள் கூறியுள்ளது. உலகம் முழுவதும் டீப்ஃபேக் வீடியோக்கள் பற்றிய கவலைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இதுபோன்ற Appகளின் அச்சுறுத்தல் வருகிறது.