Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று பிற்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்கள்,அரசியல்வாதிகள்,மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மனித உரிமைகள் தொடர்பான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தற்போதைய நிலையில் காணப்படும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன. அண்மையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வினை தொடர்ந்து பொலிஸார் மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி அப்பாவி மக்களை கைதுசெய்துவருவதுடன் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சுதந்திரத்தினையும் மறுத்துவருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஆத்துடன் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் தமது மேய்ச்சல் தரை உரிமைக்காக இதுவரையில் 154 மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் நிலையில் பொலிஸார் பக்கச்சார்பாக நடப்பதாகவும் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இதுவரையில் நீதி கிடைக்காத நிலையில் சர்வதேச நீதியை கோரியுள்ள நிலையில் அதனையே இன்று தாங்களும் வலியுறுத்திவருவதாகவும் இலங்கையின் நீதித்துறையில் தமிழர்கள் நம்பிக்கையிழந்து காணப்படும் நிலையில் சர்வதேச சமூகம் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
Next Post
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு அருவிப் பெண்கள் வலையமைப்பினரால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு அருவிப் பெண்கள் வலையமைப்பினரால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு