காத்தான்குடி நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் கல்விநடவடிக்கைகளை இம்மாதம் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நகரசபை கோரிக்கை முன்வைத்துள்ளது.
காத்தான்குடி நகரிலுள்ள தனியார் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் நோன்பு நாட்களில் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 5.30 வரை வகுப்புகள் மற்றும் பரீட்சைகளை நடத்துவதாகவும் இதன் காரணமாக பிள்ளைகள் நோன்புடன் மயக்கமுற்ற நிலைமையில் சோர்வடைந்து வீடுகளுக்கு வருவதாகவும், இரவு வணக்கங்களில் ஈடுபடுவது சிரமமாக இருப்பதாகவும் பெற்றோர்களாலும் காத்தாள்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினாலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் காத்தான்குடி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தரம் 1 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் தேற்று 06ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 24ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி மாணவர்கள் மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகரசபை விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.