கனடாவில் காணாமல் போன கிளியொன்றை கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளது.
கேம்பிரிட்ஜை சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான 16 வயதான ஆபிரிக்க சாம்பல் நிற கிளியொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
வீட்டின் கதவு திறந்திருந்ததாகவும் பதினைந்து ஆண்டுகளாக வெளியே செல்ல இந்த கிளி எத்தனித்தது கிடையாது எனவும் குறித்த பெண் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கிளி எங்கோ ஓர் இடத்தில் இருக்கும் என கருதுவதாகத் அவர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போன கிளியை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.