மட்டக்களப்பு -மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான மனித உரிமை தொடர்பான செயலமர்வு நேற்று செவ்வாய் (12) காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மனித உரிமை வாரத்தை முன்னிட்டு AHRC நிறுவன சிவில் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை சமூகத்தினரும் பங்குபற்றியிருந்தனர்.
இச்செயலமர்வில் மனித உரிமை என்றால் என்ன? மனிதனது அடிப்படை உரிமைகள் என்ன?மனிதனுக்கு எவ்வாறான அடிப்படை உரிமைகள் உள்ளன, சிறுவர் உரிமை என்றால் என்ன? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
அதேசமயம் AHRC நிறுவன சிவில் செயற்பாட்டாளர்களினால் டிசம்பர் 04 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதிவரை மனித உரிமைகள் ன வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.