உணவுக்காக வாகனங்களில் வலுக்கட்டாயமாக நுழைவதற்கு பெயர் பெற்ற யானையான நந்திமித்ராவுக்கு உணவளிக்க வேண்டாம் என்று யால தேசிய பூங்கா நிர்வாகம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
யானைக்கு மக்கள் உணவளிப்பதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக யால தேசிய பூங்கா கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யானை யாருக்கும் தீங்கு விளைவிக்காது, ஆனால் அதன் தும்பிக்கையை வாகனங்களில் செலுத்தும்போது அதன் தந்தங்கள், வாகனங்களில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்று கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குறித்த யானை வாகனங்களுக்குள் உணவு தேடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கதிர்காமம் – சித்துல்பவ்வ வீதியிலும் திஸ்ஸ-சித்துல்பவ்வ வீதியிலும் இந்த யானை அடிக்கடி நடமாடித்திரிகிறது.