சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக தனிப் பிரிவை நிறுவுமாறு, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுமக்கள் 0112 300 637 என்ற இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.
தொலைநகல் எண் – 0112 381 045 அல்லது மின்னஞ்சல் முகவரி – ccid.religious@police.gov.lk ஊடாகவும் முறைப்பாடு அளிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.