இலங்கை மெதடிஸ்த திருச்சபைவாழைச்சேனை சேகரத்தின் ஒளி விழா நிகழ்வு வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரம் ‘ஹனியல்’ சிறுவர் அபிவிருத்தி விசேட இளையோர் திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்சிக்கும் கற்பிணி தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமான பல்வேறு மனித நேய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வுகள் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்றது.இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் புலமை பரிசில் பரீட்சை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் விசேட சித்தி பெற்று சாதணை படைத்த மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.கற்பிணித் தாய்மார்களுக்கான வாழ்வாதார உதவிகள் சமூக செயற்பாட்டாளர்களின் சேவைகளை பாராட்டி அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது. நிகழ்வில் போதகர் எல்.குணதுங்க கிராம சேவகர்களான கா.ஜெகதீஸ்வரன் சி.வரதராஜன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.