Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூன்று மாதங்களுக்குள் 190க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; முழுப்பொறுப்பினையும் அரசாங்க அதிபரும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுமே ஏற்கவேண்டும்- மயிலத்தமடு பண்ணையாளர்கள்!

மூன்று மாதங்களுக்குள் 190க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; முழுப்பொறுப்பினையும் அரசாங்க அதிபரும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுமே ஏற்கவேண்டும்- மயிலத்தமடு பண்ணையாளர்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த மூன்று மாதங்களில் 190க்கும் அதிகமான மாடுகள் மயிலத்தமடு,மாதவனையில் கொல்லப்பட்டுள்ளது. இவற்றிற்கான முழுப்பொறுப்பினையும் மாவட்ட அரசாங்க அதிபரும் அதனுடன் இணைந்த திணைக்களங்களுமே ஏற்கவேண்டும் என மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் இன்றைய தினம் சித்தாண்டியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தமது மேய்ச்சல் தரையினை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் 90வது நாளாக நடைபெறுகிறது.

நேற்றைய தினம் தமது போராட்டம் ஆரம்பித்து 90வது நாளை பூர்த்திசெய்யும் நிலையில் தமது கோரிக்கை தொடர்பிலும் போராட்டம் தொடர்பிலும் பொறுப்புக்கூறவேண்டிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டும் காணாத நிலையிலும் அலட்சியப்போக்குடனும் செயற்பட்டுவருவதாக தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் மேய்ச்சல் தரைகள் எங்களுக்கே சொந்தம்,பசி துறக்கவந்த விலகின்உயிர் துறப்பது பௌத்த தர்மமா?,உயிர் கொலை புத்தனின் பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கா?,மாதவனை எங்கள் சொத்து போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தாங்கள் போராட்டம் நடாத்தி தொடங்கி இன்றுடன் 90 நாட்கள் கடந்துள்ள நிலையில் 190க்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அத்துமீறிய குடியேற்றக்காரர்களினால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு முறையிடச்சென்றால் முறைப்பாட்டை தங்களுக்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் இதன்போது பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய நடவடிக்கைகள் காலத்தில் தங்களை கால்நடைகளை மயிலத்தமடு,மாதவனைக்கு கொண்டுசெல்லுமாறு தீர்மானங்கள் மாவட்ட,பிரதேச விவசாய குழுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டு நாங்கள் அங்கு மாடுகளை கொண்டுசெல்லும்போது அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையெனவும் இதன்போது பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி,அரசியல்வாதிகள்,அதிகாரிகள் அனைவரும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.மாறாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகளே அதிகரித்துவருகின்றது.அங்கு கால்நடை பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு என அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரணும் அங்கு சட்ட விரோத பயிhச்செய்கையாளர்களுக்கு உதவும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்பதையே பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் தங்கள் மீது புகார் என்றால் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கையெடுக்கும் பொலிஸார் தங்களால் வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையே காணப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு ஏறாவூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பொலிஸாரோ மகாவலி அபிவிருத்தி திணைக்களமோ இதுவரையில் நிறைவேற்றாத நிலையே காணப்படுவதாகவும் இது தொடர்பில் சட்டத்தரணிகள் நீதிபதிகள் பொலிஸாரை வலியுறுத்தவேண்டும் எனவும் இதன்போது பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்கொண்டுசெல்லவுள்ளதாகவும் தமக்கு நீதிகிடைக்காவிட்டால் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கத்தினை செய்யவேண்டிய நிலையேற்படும் எனவும் பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
செய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

August 4, 2026
சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

August 4, 2026
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
செய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

August 4, 2026
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

August 4, 2026
Next Post
வடக்கு, கிழக்கு மக்களே அவதானம்; வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மக்களே அவதானம்; வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.