மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் உட்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ம் திகதிவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் நேற்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் 27ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தினை அலங்கரிக்க மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் சிவப்பு மஞ்சல் கொடிகள் மற்றும் கம்பிகள் உட்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் வாகனத்தை மறித்து சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சாரதியை பார்பதற்காக பொலிஸ் நிலையம் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மகன் ஆகியோர் அங்கு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவேந்தலில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன் 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை 13 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இதில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த சாரதியை பிணையில் விடுவிப்பதற்காக கடந்தவாரம் முன்நகர்வு விண்ணப்பபத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நிலையில் அவர் பிணையில் வெளிவந்ததுடன் ஏனைய இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக இருவரையும் மட்டு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்;தப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.