Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெளன ராகம் திரைப்பட பிரபல நடிகர் காலமானார்!

மெளன ராகம் திரைப்பட பிரபல நடிகர் காலமானார்!

3 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரா சங்கரன் இன்று (14)காலமானார். அவருக்கு வயது 92. மெளன ராகம் படத்தில் சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ரா சங்கரன். இயக்குநராகவும் நடிகராகவும் தனக்கென தனி அடையாளத்துடன் வலம் வந்த ரா சங்கரன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. இதனையடுத்து ரா சங்கரன் மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

1974ம் ஆண்டு வெளியான ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரா சங்கரன். தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, தூண்டில் மீன், பெருமைக்குரியவள், வேலும் மயிலும் துணை, குமரி பெண்ணின் உள்ளத்திலே போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஆவதற்கு முன்னதாக அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

1962ல் ரிலீஸான ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய ரா சங்கரன், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, அமரன், சின்ன கவுண்டர், சதி லீலாவதி, காதல் கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானார். ரா சங்கரனை, “மிஸ்டர் சந்திரமெளலி” என கார்த்திக் கூப்பிடும் அந்தக் காட்சி இப்போதும் ரசிக்க வைக்கும்.

ரா சங்கரன் கடைசியாக 1999ம் ஆண்டு வெளியான அழகர்சாமி படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் பாரதிராஜா ரா சங்கரனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரா சங்கரனின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ரா சங்கரன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
மட்டு கல்லடிப்பால ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!(புகைப்படங்கள்)

மட்டு கல்லடிப்பால ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!(புகைப்படங்கள்)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு