மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதனை அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
இதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
இதனையடுத்து, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் சர்மா செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.