கொழும்பு நகரில் 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவற்றில் சில மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என தெரியவந்துள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொழும்பு நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டன.
இதன்படி, இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை ஆணையார் தெரிவிக்கையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி 330 மரங்களே ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.