இலங்கையின் தென்பகுதியில் தெய்வேந்திர முனையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சீனா புதியதொரு ராடர் தளத்தை நிறுவ முனைவதான செய்திகள் இலங்கையின் உளவுத்துறையின் ஆதாரங்களின் அடிப்படையில் வந்துள்ளன.
ஆனால் இந்த விடயம் குறித்து இதுவரை இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தத்தமது தரப்புகளில் இருந்து எதிர்வினைகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
இந்தச் செய்தியை இந்த மூன்று நாடுகளும் உறுதிப்படுத்தவும் இல்லை – மறுத்துக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை.