தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுமலர்ச்சி என்ற பெயரில் இந்தியா – இலங்கைக்கு இடையில் சட்டவிரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் என்பவற்றில் ஈடுட்டதாக சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து நேற்று (07) பெருந்தொகை பணம், தங்கம் மற்றும் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவான என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று சென்னையில் 8 இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது ஐயப்பன் நந்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுமலர்ச்சி குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை அகதியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான முகமது அஸ்மின் சார்பாக ஐயப்பன் நந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நிர்வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
முன்னதாக 2022இல் தமிழகத்தின் 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 13 பேர் கைது செய்யப்பட்டனர்.