Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எங்கள் மக்களது உணர்வுகளை மழுங்கடிப்பது என்பது முடியாத காரியம்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

எங்கள் மக்களது உணர்வுகளை மழுங்கடிப்பது என்பது முடியாத காரியம்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எங்களது மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ அல்லது பாதுகாப்புப் படையோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் என மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் சிறைச்சாலைக்கு சென்றார்.

அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்த பின்னர் அவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கடந்த 11ஆம் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களது உணர்வாளர்களை பார்ப்பதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று இருந்தேன் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் நகுலேஷன் அவர்கள் மற்றும் முனைக்காட்டை சேர்ந்த பேக்கரியில் கேக் விற்பனை செய்தவர் இவ்வாறாக 11 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கின்றார்கள்.

உண்மையில் நகுலேஷ் அவர்கள் இறந்த மாவீரர்களது குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை கொடுத்து அவர்களை கௌரவிப்பதற்காக அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.அதே போன்று மோசேஸ் என்கின்ற பையன் பேக்கரியில் ஒரு கேக் விற்பனை செய்வதற்காக கைது செய்யப்பட்டு இருக்கின்றார். அதுபோல வாடகைக்கு வண்டி செலுத்துபவர் தரவை மாவீரர் உயிலும் இல்லத்திற்கு ஒலிபெருக்கி போன்ற பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் அதைவிட இன்னும் ஒரு மோசமான நிகழ்வு கறுவாக்கேனியிலே இடம்பெற்றிருக்கின்றது. இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கின்றது அந்தச் சண்டையில் ஒருவர் போலீஸ் நிலையம் சென்று மாவீரர் துயிலும் இல்ல நிகழ்வுக்காக பணம் கேட்டதாக முறைப்பாடு ஒன்றை வேண்டுமென்று செய்திருக்கின்றார் அவருக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்து இருக்கின்றது.

அந்த வகையில் நான் நினைக்கின்றேன் இது ஒரு திட்டமிட்ட செயலாக கைதுகள் என்பது இந்த முறை பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு உள்ளே கைது செய்தது ஒரு திட்டமிட்ட செயலாகத்தான் நான் பார்க்கின்றேன். ஏனென்றால் இந்த முறை 12 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்தடுத்து வரும் தினங்களில் இந்த மாவீரர் நினைவு நாட்களை செய்வதற்கு மக்களை பயம்முறுத்தும் ஒரு செயலாக போலீசார் இந்த வேலைகளை செய்து இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

ஏனென்றால் இந்த கைது செய்யப்பட்டவர்கள் பிரபாகரனின் படத்தையோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமான பதாகைகள் எதையுமே வைத்திருக்காமல் அவர்கள் தங்களுடைய உறவுகளை நினைவு கூர்வதற்காக சென்ற வேளையிலே அல்லது பங்கு பற்றிய வேளையிலே அவர்களை கைது செய்திருப்பது என்பது உண்மையிலேயே ஏற்க முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த நாட்டிலேயே மரணித்தவர்களை தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பதாகைகள் அவர்களது கொடிகள் இல்லாமல் நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் கூறி இருக்கின்ற இந்த வேளையில் அவ்வாறு எதுவுமே செய்யாத இந்த மாவீரர்களை நினைவு கூர்ந்தவர்களையும் அவர்களது பெற்றோர்களை கௌரவித்தவர்களையும் பேக்கரியில் கேக் விற்றவரையும் அல்லது குடும்பச் சண்டையில் ஈடுபட்டவர்களையும் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்திருப்பது என்பது அதுவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது என்பது ஏற்க முடியாத ஒரு விடயமாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் வடகிழக்கில் மாத்திரமல்ல முழு நாட்டிலுமே பிரச்சனைகள் உருவாகி இருக்கின்றது. தெற்கில் இரண்டு தடவை கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது. அதேபோன்று வடகிழக்கில் தங்களது உரிமைகளை பெறுவதற்காக மக்கள் போராடியிருக்கின்றார்கள் மரணித்திருக்கின்றார்கள். அந்த வகையில் அவர்களை நினைவு கூறுவது என்பதை அரசாங்கம் எக்காரணம் கொண்டும் தடை செய்ய முடியாது. அதேபோன்று மக்கள் கூட நீங்கள் எத்தனை தடைகளை விதித்தாலும் அவர்களை நினைவு கூறுவதை விட மாட்டார்கள் என்பதனை நான் மிகவும் ஆணித்தரமாக கூறிக் கொள்வது மாத்திரம் அல்லாமல் நான் கூட இன்று நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டு தான் இருக்கின்றேன். கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சந்தியிலே கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக நினைவேந்தி விளக்கு கொளுத்தியதற்காக எனக்கும் எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு தற்போதும் நான் நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டு தான் வருகின்றேன்.

அந்த வகையில் எங்களது மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ அல்லது பாதுகாப்புப் படையோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம். இந்த வருடம் 10 பேரை கைது செய்திருக்கின்றீர்கள் அடுத்த வருடம் நீங்கள் விருப்பமென்றால் இதைவிட அதிகளவான கைதுகளை செய்யலாம். ஆனால் ஒன்று கைது செய்வதை மிகவும் அநியாயமான கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். எந்த வித வாழ்வாதாரமும் அற்ற வகையிலே அவர்களது குடும்பம் நிற்கதியாகியுள்ளது. அவர்களது உறவினர்கள் மரணித்திருக்கின்றார்கள் அவர்களை நினைவு கூர்ந்ததற்காக அவர்களை நிர்க்கதியாக்கி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை அடைத்து வைத்திருப்பது என்பது ஏற்க முடியாத விடயம்.

எதிர்வரும் 21ஆம் தேதி ஜனாதிபதி அவர்கள் வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க இருப்பதாக நேற்று மதியம் செய்தி அனுப்பியிருக்கின்றார். நிச்சயமாக 21-ம் தேதி மாலை 3 மணிக்கு ஜனாதிபதி அவர்களை சந்திப்போம். அவரிடம் நாங்கள் இந்த பிரச்சனையை மிகவும் ஆணித்தரமாக கூறுவோம். அவர் என்ன சொல்வார் என்று பார்ப்போம் இருப்பினும் அவரது கூற்றுக் கூட அவரது உத்தரவுகள் கூட பாதுகாப்பு படையினாலும் மற்றும் அரசு அதிகாரிகளினாலும் நிறைவேற்றப்படுவதாக கடந்த காலங்களிலே எமக்கு தெரியவில்லை. இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்த உறவுகள் சம்பந்தமாக 21ஆம் தேதி ஜனாதிபதியிடம் பேசுவோம்.

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
அக்குரணை அபிவிருத்தி தொடர்பான அறிக்கையை 06 வாரங்களில் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்; ரணில் உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.