மட்டக்களப்பு கிரான் கிராமத்தின் வரலாற்றில் முதற் சட்டத் தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சட்டத் தரணி குமாரவேல் புருஷோத்தமன் அவர்களை பாராட்டி, கௌரவிப்பு வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை (17) கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. கிரான் மத்திய கல்லூரியின் 1999,2000 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது கௌரவ அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிகழ்வில் சர்வமத வழிபாட்டுடன் சர்வமத குருமார்களினால் இறை ஆசி வழங்கப்பட்டது. மாணவர்களின் நடன நிகழ்வும் இடம் பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அதிதிகள் சட்டத் தரணி குமாரவேல் புருஷோத்மன் அவர்களின் கடந்த கலா சமூக செயற்பாடு மற்றும் எதிர்காலத்தில் அவர் எவ்வாறு மக்கள் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவரது சாதனை தொடர்பாக வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது. அவரை பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புக்கள்,நண்பர்கள்,அரச உயரதிகாரிகளினால் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து மடல் வாசித்தும் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.இவர் கிரான் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். அத்துடன் அண்மையில் நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்ப்பட்டனர்.நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஆலய குரு சிவஸ்ரீ மு.சண்முகம் குருக்கள்,கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, முன்னாள்,இந்நாள் அதிபர்கள்.ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.