சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் வகையில் வவுனியாவில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்று கூடல் இன்று ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வவுனியாவில் இடம் பெறவுள்ள இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், தமழ் மக்கள் கூட்டணி மற்றும் புதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பன கலந்து கொள்ளவுள்ளன.
தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கட்ட மைப்பை உருவாக்கும் ஆரம்பக் கலந்துரையாடலாக இது இடம்பெறவுள்ளது.