புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அண்மையில் இலங்கை அரசை சந்தித்த குழுவில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவர் எந்த ஒரு முன்னறிவித்தல் இன்றி அக்குழுவில் இடம் பெற்றுள்ளதால், குறித்த நபரை அந்த அமைப்பு தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அண்மையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையின் பௌத்த மற்றும் அரசியல் அங்கத்தவர்களிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் இருதரப்பு கருத்துக்களை அடிப்படையாக கொண்ட இமாலய பிரகடனமும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ”கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, எதிர்மறையான விளம்பரங்கள், கருத்துக்களை வெளியிட்டதால் குறித்த நபரை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்பு இடைநிறுத்த முடிவு செய்துள்ளது.” என அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும், இது தொடர்பில் இலங்கை மற்றும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து கண்டனங்களும் வலுக்க ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், சிறந்த இலங்கைக்கான சங்கமன்றத்தினர் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இடையிலான சந்திப்பு கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு ,13ஐ நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம் ,மாகாண, மாவட்ட சபைகள் ஊடான செயற்படுகள் என்ற விடயங்களை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இலங்கை பல தமிழ் அரசியல் கட்சிகளுடனோ, தமிழர் தரப்புக்களுடனோ எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை பல்வேறு தமிழர் தரப்புக்களில் இருந்தும் எதிர்பலைகளை தோற்றுவித்திருந்தது.