Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
We For Us அமைப்பினரின் ஏற்பாட்டில் விதைப்பந்து திருவிழா!

We For Us அமைப்பினரின் ஏற்பாட்டில் விதைப்பந்து திருவிழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புனானை வனவளத்துறை அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள வனப்பகுதியில் விதைப்பந்து திருவிழா 23.12.2023 அன்று காலை 9.30 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த # வனமீளுருவாக்கல் செயற்திட்டத்தினை We For Us எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த We For Us நிறுவனமானது மட்டக்களப்பு இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இளைஞர் அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று துறைகளிலும் முதன்மையாக செயற்பட்டு வருவதோடு இந்த துறைகளினூடாக இளைஞர்களுக்கான பல் வகைப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டகள், தலைமைத்துவ பயிற்சிநெறிகள், கற்கை நெறிகள், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் போன்ற பல தரப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் GreenBatti எனும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பினை பசுமையாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இந்த விதைப்பந்து திருவிழா நடாத்தப்பட்டது.

இதில் புளி, வேம்பு, வாகை , ஆத்தி , இலுப்பை , மஞ்சாடி, புங்கை , நாவல் , கூலா , திருக்கொன்றை, மதுரை போன்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்டு விதைகளைக்கொண்டு , விதைப்பந்துகளாக We For Us இன் இளையோர் படையணியின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு புனானை வனப்பகுதியில் வீசப்பட்டது.

மேலும் இதன்போது 1000 மேற்பட்ட மரங்களும் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விதைப்பந்துகள் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அனைத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான A.M Riyas Ahamed அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது . இந்த விதைப்பந்து திருவிழாவிற்கு நிதியுதவியினை “ஓராயம் நிதியம்” வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “MSM creation photography” புகைப்பட உதவியினை வழங்கியிருந்தது.

2024 இல் இந்த GreenBatti செயற்றிட்டத்தின் ஊடக இதனை விட பல ஆயிரம் விதைப்பந்துகளை வீசுவதற்கு We For Us நிறுவனத்தினர் உத்தேசித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
MISS EARTH கிரீடத்தை அல்பேனியாவை சேர்ந்த டிரிடா சிரி வென்றார்!

MISS EARTH கிரீடத்தை அல்பேனியாவை சேர்ந்த டிரிடா சிரி வென்றார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு